படையப்பாவில் நீலாம்பரி தான் ஜெயலலிதாவா – ரம்யா கிருஷ்ணன் அளித்த பழைய பேட்டி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
600
Ramya
- Advertisement -

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதா சாயலில் இருக்கிறது என்று எழுந்த கேள்விக்கு ரம்யா கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த்தின் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று படையப்பா.

-விளம்பரம்-

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. காலம் கடந்தாலும் படையப்பா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார்.

- Advertisement -

திருப்புமுனையாக அமைந்த படையப்பா :

இந்த படத்தின் மூலம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது என்று சொல்லலாம். தற்போது தென் இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக ரம்யா கிருஷ்ணன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதா சாயலில் இருக்கிறது என்று எழுந்த கேள்விக்கு ரம்யா கிருஷ்ணன் கூறியது, ஐயோ! படையப்பா படத்தில் நான் ஜெயலலிதாவா?

ஜெயலலிதா தான் நீலம்பிரியா ? :

அவங்க எங்க இங்க வந்தார்கள். இது ஒரு காதல் கதை. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இப்படி எல்லாம் கூடவா பார்ப்பது? இதே கதையில் வேற ஒரு ஹீரோ நடித்து இருந்தால் இப்படி கேப்பீங்களா? ரஜினி சார் படம் என்பதால் ஏதேதோ லிங்க் பண்ணி பார்க்கணுமா? படத்தில் நீலாம்பரி என்கிற கதாபாத்திரம் வழக்கமான ஹீரோயின்கள் மாதிரி இல்லாமல் ரொம்ப வித்தியாசமான ஒரு கதாபாத்திரம். வாழ்க்கையில் யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்காதவர். அவள் ஹீரோவை லவ் பண்ணும் போது தோல்வி அடைகிறாள்.

-விளம்பரம்-

இது வில்லி கதாபாத்திரமே கிடையாது :

அந்த தோல்வியை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளோட பிடிவாத குணம் அவளை எந்த எல்லைக்கும் விரட்ட துடிக்குது. கடைசியில் இவர் கதை முடிந்து போகுது அவ்வளவுதான். இதுல என் கதாபாத்திரம் ஜெயலலிதா மாதிரி என்று சொல்வதெல்லாம் அவங்களுடைய நினைப்பு தானே தவிர படத்தோட நோக்கம் அது இல்லை. அதை மீறி அப்படி பேசுபவர்களை பற்றி எனக்கு கவலையும் இல்லை. அதேபோல் நான் இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி பலரும் கேட்டிருந்தார்கள். இது வில்லி கதாபாத்திரமே கிடையாது. ஒரு லவ் கதை.

நீலாம்பரி குறித்து ரம்யா கிருஷ்ணன் :

அவளோட வெறித்தனமான கண்மூடித்தனமான லவ். அது கிடைக்கவில்லை என்றவுடன் அவள் மத்த பெண்கள் மாதிரி மூளையில் ஒதுங்கி உட்கார்ந்து முக்காடு போட்டுக்கொண்டு அழாமல், மனசுக்குள் நினைத்துப் புலம்பி அடுத்த கல்யாணத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் இல்லை. அவள் தன் காதலுக்காக கடைசி வரைக்கும் போராடுகிறாள். அது ஹீரோவிற்கு எதிராகத்தான் அமைகிறது. அவள் செத்தாலும் அந்த போராட்டம் வீரத்தனம் தானே தவிர வில்லித்தனம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement