சினிமாத்துறையில் ரம்யா கிருஷ்ணனின் அர்ப்பணிப்பு குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரம்யா கிருஷ்ணன். அதோடு தமிழ் சினிமாவில் 40ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான். அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவர் விஜயகாந்த நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Advertisement

ரம்யா கிருஷ்ணன் திரைப்பயணம்:

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பன்மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஆரம்பத்தில் இவரால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படம் தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. மேலும், நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வெற்றி பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன் தான்.

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் படங்கள்:

அது மட்டும் இல்லாமல் இவர் ஐந்து திரை உலகில் உள்ள சூப்பர் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது ரம்யா கிருஷ்ணன் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர், ராஜூவ்குமார் இயக்கத்தில் உருவாகும் சபாஷ் நாயுடு போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement

ரம்யா கிருஷ்ணன் அர்ப்பணிப்பு:

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவில் அம்மன் கதாபாத்திரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரம்யா கிருஷ்ணன் தான். அம்மன் படங்களில் நடிக்கும் போது ரம்யா கிருஷ்ணன் அவர்கள் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரை அசைவ உணவு எதுவும் சாப்பிட மாட்டாராம். செருப்பு கூட அணியாமல் பயபக்தியுடன் நடித்துக் கொடுப்பாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரம்யா கிருஷ்ணனின் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement