ரம்யா கிருஷ்ணன்- வம்சி விவாகரத்து குறித்து வெளியாகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகமாகி வருகிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி.வி பிரகாஷ்- சைந்தவி, ஜெயம் ரவி- ஆர்த்தி என பல பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் பிரபல இயக்குனர் வம்சியை 2003 ஆம் ஆண்டு திருமணம்
செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
வம்சி அளித்த பேட்டி:
இதனால் பலரும் பல விதமான கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் வம்சி, நான் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதனால் நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம் என்று வதந்திகளை கிளப்பி இருக்கிறார்கள். இப்படி பொய்யான தகவல்களை பரப்புவது சாடிசம். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:
நாங்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெறுவது என்பது உண்மை இல்லாத விஷயம் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் 40ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார்.

ரம்யா கிருஷ்ணன் குறித்த தகவல்:
அதை தொடர்ந்து இவர் இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமான படம் வெள்ளை மனசு’. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன்.

ரம்யா கிருஷ்ணன் திரைப்பயணம்:
இருந்தாலும், இவருக்கு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. மீண்டும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பாகுபலி ராஜமாதா ரோல் தான். தற்போது இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.






