டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ரம்யா. இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாவில் ரம்யா பணியாற்றி இருக்கிறார். இவர் முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இவர் அதிக ஆர்வம் உடையவர்.

Advertisement

ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் :

அதனுடைய வெளிப்பாடுதான் தற்போது இவருக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. மேலும், நடிகை ரம்யா செய்த ஊட்டச்சத்து குறித்து சோஷியல் மீடியாவில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து இருந்தார்கள். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்று இருக்கிறார்.

பிட்னஸ் குறித்த டிப்ஸ்கள் :

தற்போது இவர் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும் தகுதியானவர். அதே போல் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக ஊடகத்தில் பிட்னஸ் தொடர்பான பல பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். மேலும் , அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் உடற்பயிற்சியால் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து ரம்யா அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

Advertisement

விபத்து குறித்து பதிவு:

அதில் அவர், தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சி மேற்கொண்டபோது உயரமான கால் குரூப்ஸ் பிரிட்ஜை செய்ய முயற்சித்ததால் காயம் ஏற்பட்டது. உடற்பயிற்சியின் போது என்னுடைய இடுப்பில் பொருத்திருந்து 40 கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்தது. கிட்டத்தட்ட எடையின் பாதி என்னுடைய கழுத்தை நெரித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உடனடியாக எனக்கு உதவி செய்தார்கள்.

Advertisement

ரம்யா சொன்ன அறிவுரை:

இதனால் எனக்கு எந்த பெரிய விளைவுகளும் ஏற்படவில்லை என்று கூறி தனக்கு காயங்கள் ஏற்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். மேலும், இதை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து சரியாக கவனம் இல்லாமல் இருந்தால் அதிக எடையுடன் புதிய தசைவுகள் அல்லது உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். முறையான மேற்பார்வையின் வழிகாட்டுதலின்படி தான் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் சில விபரீதங்கள் நடக்கும் என்றும் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement