30 மட்டும் தான். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை. எளிமையாக நடைபெற உள்ள நடிகர் ராணாவின் திருமணம். எப்போ தெரியுமா ?

0
571
rana

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். நடிகர் ராணாவிற்கும் நடிகை திரிஷாவுக்கும், இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது. ஆனால், இதுகுறித்து இருவருமே மௌனம் சாதித்து வந்தனர்.

View this post on Instagram

And life moves fwd in smiles 🙂 Thank you ❤️

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

சமீபத்தில் ராணா டகுபதி- மிஹீகா பாஜாஜ் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் ராணா. இதனால் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.ஆனால், தனது மகனுக்கு திருமண நிச்சயம் நடைபெற இல்லை என்று ராணாவின் தந்தை சுரேஷ்பாபு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளதாக அவரின் தந்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொரோனவால் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராணாவின் திருமணம் நடைபெறும் என அவர் கூறியிருந்தார். கொரோனா தொடர்பான பிரச்னைகளால் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக மெஹந்தி நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்று உள்ளது.

miheeka bajaj, miheeka bajaj haldi

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திருமணத்தில் வெறும் 30 பேர் மட்டும் தான் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதே போல திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துப்படுவார்கள் என்றும் திருமண நிகழ்ச்சியில் தேவையான கிருமி நாசினிகள் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் கண்டிப்பாக சமூக இடைவெளியும் கடைபிடக்கப்படும் என்றும் ராணாவின் தந்தை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement