பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “சஞ்சு” படம் 14 நாட்களில் 300 கோடி ருபாய் வசூல் படைத்தது சாதனை செய்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இவர் தனத்துக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழக்கை வரலாற்று படமான “சஞ்சு” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத் நிஜ வாழ்வில் குடிப்பழக்கத்திற்கும் , போதை பொருளுக்கும் அடிமையாகி இருப்பதை போல சில காட்சிகள் காண்பிக்க பட்டிருந்தன.ஆனால், இந்த படத்தில் சஞ்சய் தத்தாக நடித்த ரன்பீர் கபூரும் தானும் நிஜ வாழ்வில் நிறைய குடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர் “நான் குடிக்கு அடிமை கிடையாது.அனால், நான் அதிகம் குடிப்பேன் என்பது உண்மை. குடிப்பழக்கம் எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது. என்னுடைய குடும்பத்தை பற்றி உங்களுக்கே தெரியும். எனது குடும்பத்தில் அனைவருமே குடிப்பார்கள். அதனால், குடிப்பழக்கம் எனது பரம்பரையிலே உள்ளது”
பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், இந்தி சினிமாவில் கபூர் என்ற பிரபல வம்சாவழி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பிரிதிவி ராஜ் கபூர் ஒரு பழம் பெரும் இந்தி நடிகர் ஆவார். அவரை தொடர்ந்து ராஜ் கபூர், சஷி கபூர், கரீனா கபூர் என்று பல கபூர் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.