2011 ஆம் ஆண்டு மாட்டிறைச்சி குறித்து பேச்சு – தற்போது ரன்பீர், ஆலியாவை உஜ்ஜெய்ன் கோயிலில் தடுத்த இந்து அமைப்பினர்

0
313
ranbeer
- Advertisement -

ரன்பீர் கபூர் மற்றும் அவருடைய கர்ப்பிணி மனைவியும், நடிகையுமான ஆலியா பட் ஆகிய இருவரையும் உஜ்ஜயினி மகாகாளி கோயிலுக்குள் நுழைய விடாமல் பஜ்ரங் தல அமைப்பினர் தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களாக ரன்பீர் கபூர்- நடிகை ஆலியா பட் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களின் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. சமீபத்தில் தான் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பது குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனிடையே ஆலியா பட்- ரன்பீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிரம்மாஸ்திரா.

-விளம்பரம்-

இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரன் ஜோகர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரன்பீர் கபூர்- ஆலியா பட் இருவரும் உஜ்ஜயினி மகாகாளி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்கள்.

- Advertisement -

உஜ்ஜயினி மகாகாளி கோயில்:

இந்த நிலையில் ரன்பீர் கபூர் மற்றும் அவருடைய கர்ப்பிணி மனைவி ஆலியா பட் ஆகிய இருவரையும் உஜ்ஜயினி மகாகாளி கோயிலுக்குள் நுழைய விடாமல் பஜ்ரங் தல அமைப்பினர் தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் மகாகாளி கோயில் ஒன்று உள்ளது. இது உலக பிரசித்தி பெற்ற தளமாக இருக்கிறது. இந்த கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர்- ஆலியா பட் சென்றிருக்கிறார்கள்.

பஜ்ரங் தல அமைப்பு:

அப்போது பஜ்ரங் தல அமைப்பினர் ரன்பீர் கபூர்- ஆலியா பட் இருவரையும் மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்து விரோதிகள் என்று கோஷமிட்டு கருப்பு கொடியும் காட்டி இருந்தார்கள். இதனை அடுத்து அங்கு போலீசார் உடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் கோயிலில் பரபரப்பான நிலவரம் ஏற்பட்டிருந்தது. மேலும், இது குறித்து பஜ்ரங் தல அமைச்சர் கூறி இருந்தது, நாங்கள் அமைதியான முறையில் தான் ரன்பீருக்கும் ஆலியாவிற்கும் கருப்புக்கொடி காட்டி இருந்தோம்.

-விளம்பரம்-

பஜ்ரங் தல அமைப்பினர் கூறியது:

ஆனால், போலீசார் தேவையில்லாமல் எங்கள் மீது தடியடி நடத்தினார்கள். ரன்பீரை தடுத்து நிறுத்தியதற்கு காரணம், கோமாதாவுக்கு எதிராக அவர் அவதூறாக பேசியிருந்தார். அவர் மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்து பேசியிருந்தார். மாட்டிறைச்சி நல்லது என்றும் கூறியிருந்தார். இதனால் தான் அவரை மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால், ரன்பீர் – ஆலியா பட் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு சென்றனர் என்று கூறியிருந்தார்கள். இப்படி பஜ்ரங் தல அமைப்புக்கு ரன்பீர் மீது கோபப்படுவதற்கு காரணம் 2011 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தான்.

ரன்பீர் செய்த செயல்:

அதாவது, ரன்பீர் கபூர் தனது ராக் ஸ்டார் பட ப்ரோமோஷன் விழாவின்போது மாட்டிறை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குடும்பம் பெஷாவரில் இருந்த போது எங்களுக்கு இந்த உணவு பழக்கம் வந்தது. எனக்கு மட்டன் பாயாவும், மாட்டு இறைச்சியும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அப்படி அவர் பேசியிருந்த வீடியோ பிரம்மாஸ்திரா பட வெளியீட்டுக்கு முன் சோசியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது. இதனால் தான் ரன்பீர் – ஆலியா பட் இருவரும் மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று பஜ்ரங் தல அமைப்பு கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement