தல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.! கிண்டலடித்து ரங்கராஜ் பாண்டே.!

0
768
rangarajpandey
- Advertisement -

தந்தி தொலைகாட்சியில் தலைமை செய்தி வாசிப்பாளராக இருந்த ரங்கராஜ் பாண்டே அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் நியூஸ் 7 சேனலுக்கு செல்கிறார், அரசியலில் குதிக்கபோகிறார் என்று பல்வேறு வதந்திகள் வந்தது.

-விளம்பரம்-
Rangarajpandey

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் தற்போது சினிமாவில் நடிக்க சென்று விட்டார் அதிலும் அஜித் படத்தில். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது அஜித், வினோத் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிற்கிறார். இந்நிலையில்
தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரங்கராஜ் பாண்டே. அப்போது அவரிடம் பார்வையாளர்களிடம் இருந்து அஜித்துடன் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அஜித் படத்தில் நடிப்பது குறித்து நானே பேசி, அதை வீடியோவாகப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே எனக்கு 84,000 லைக்குகள் வந்தன. மேலும், பல்வேறு விளம்பர நிறுவங்களும் விளம்பரத்தில் நடிக்க என்னை அழைத்தனர்.
இந்த சமயத்தில், இரும்பு முறுக்குக் கம்பெனி விளம்பரங்களில் நடிங்களேன் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement