பத்திரிகையாளரும் நடிகருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று காலமானார். இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர்களும் ரங்கராஜ் பாண்டேவிற்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இவர் பீகார் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தினமலர் செய்தி ஊடகத்தில்தான் தொடக்கத்தில் வேலை செய்திருந்தார். அதோடு தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தொகுப்பாளராக, தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் என் கேள்விக்கென்ன பதில், மக்கள் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
மேலும் சுவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தல அஜித் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை, விஜய் சேதுபதியின் ரணசிங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நீதிமன்றத்தில் அஜித்திற்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சாணக்கியா என்ற யூடியூப் சேனலில் பல சினிமா மற்றும் அரசியல் பற்றிய செய்திகளை பதிவிட்டு வருகிறார்.
ட்விட்டர் பதிவு :
இந்நிலையில் நேற்று இரவு ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹன் காலமானார். இதனை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவின் மூலம் உறுதி செய்திருந்தார். அவர் போட்டிருந்த பதிவில் “என் திருத்தகப்பனார் ஸ்ரீ ஸ்ரீ உவே ரகுநாதாச்சார்யா ராமசிங்ஹாசன் நேற்று இரவு வைகுண்ட ஏகாதசியில் மார்கழி 18 திங்கள் கிழமை 02.01.22 ஆம் தேதி இரவு 9.45மணியளவில் திருவடியை அடைந்தார்.
ரஜினிகாந்த நேரில் சென்று அஞ்சலி :
அவரது காரியங்கள் சென்னையில் செய்வாய் கிழமை நடைபெற உள்ளது. இப்படிக்கு அடியேன் ரங்கராஜ் பாண்டே என தன்னுடைய தந்தையின் மறைவை கூறியிருந்தார். இந்த நிலையில் இச்செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரங்கராஜ் பாண்டேவின் வீட்டிற்கு நேரடியாக சென்று மறைந்த ராம்சிங்காஹன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த விடியோ தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் ஆறுதல் :
அந்த வீடியோவில் ரஜினிகாந்த மறைந்த ராம்சிங்காஹன் அவருக்கு மரியாதையை செலுத்திய பின்னர் ரங்கராஜ் பாண்டேவின் கைகளை பிடித்து எதற்கும் கலங்காதிர்கள் என்று ஆறுதல் கூறினார். மேலும் அரசியல் பிரபலங்களும், நடிகர்களும், பத்திரிக்கையாளர்க்ளும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை ரங்கராஜ் பாண்டேவிற்கு தெரிவித்து வருகின்றனர்.