இயக்குனர் ராஜ்குமார் ராமசாமி சினிமாவில் நுழைவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்ற நடன நிகழ்ச்சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது பயிற்சி பெரும் மாணவியாக வந்த ஜஸ்வினி என்ற இளம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியுள்ள்ளது. 9 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் விரைவில் திருமண செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வரும் மே 25 ஆம் தேதி நடக்கவிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.




