தமிழகம் சுடுகாடாகிவிடும்..! ரஜினியின் சர்ச்சை பேச்சு..! வக்காலத்துவாங்கும் ரஞ்சித் ..?

0
496
Ranjith

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சமீத்தில் தூத்துக்குடி போராட்டத்தின் போது காயமடைந்த மக்களை ரஜினி நேரில் சென்று சந்தித்த போது ஒரு இளைஞர் ரஜினியை யார் நீங்க..? என கேட்டுள்ளார்.

rajini

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில்”போராட்டம் போராட்டம் என்று நடத்தினால் நாடு சுடுகாடாகிவிடும் “என்று கூறியிருந்தார்.இதனால் உரிமைக்காக போராடி வரும் மக்களை ரஜினி கொச்சை படுத்திவிட்டார் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனை பற்றி கருத்து கூறிய “காலா” படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவிக்கையில் “போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல, அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்..ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தித்தான் நாம் நம்முடைய உரிமையை பெற வேண்டியுள்ளது” என்பதை அவர் சொல்லியிருக்கிறார்..அந்த அர்த்தத்தில்தான் அவர் அதைச சொன்னார் என்று விளக்கியுள்ளார்.

ranjith

மேலும் ,சில நாட்களுக்கு முன்னர் வெளியான காலா படத்தின் டீசரில் ஒரு காட்சியில் ரஜினி இறங்கி போராடுவோம் என்று ஒரு வசனத்தை பேசியிருப்பார், ஆனால் நிஜ வாழக்கையில் மட்டும் ரஜனி போராட வேண்டாம் என்று சொல்கிறார் என்று சில மீம்களும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.