திருட்டு கல்யாணம் பண்ணி வைக்கவே சிலர் அலுவலகம் வைத்து வேலை செய்கிறார்கள்- ரஞ்சித் பரபரப்பு பேட்டி

0
202
- Advertisement -

பிரபல நடிகர் ரஞ்சித் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுயமரியாதை திருமணத்தைப் பற்றி பேசியிருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரஞ்சித். குணச்சித்திர நடிகர் ஆகவும் வில்லனாகவும் நடித்த ரஞ்சித், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் ரஞ்சித் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் சினிமா மட்டுமல்லாமல், சீரியல்களிலும் ரஞ்சித் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலிலும் ரஞ்சித் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் ‘கவுண்டம்பாளையம்’ அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

- Advertisement -

ரஞ்சித் பேசியது:

செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித் , ஒரு சுயம் மரியாதை கல்யாணம் என்ற பேர்ல, இப்ப கூட நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணை மூணு நாள் கடத்திக் கொண்டு போய் வச்சுட்டு எல்லாரும் சேர்ந்து சுய மரியாதை கல்யாணம் பண்ணாங்க. அந்தப் பிரச்சினையில் மன்றத்தை அடித்து நொறுக்கும் போது, அங்கு யாராவது ஆட்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிர் சேதம் நேர்ந்திருக்கலாம். இந்த மாதிரி சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் கருத்தை எல்லாம் சொல்ற படம் தான் நம்ம ‘கவுண்டம்பாளையம்’ என்றார்.

சமூக நீதி :

மேலும் அவர், சமூக நீதி பற்றி யாராவது பேசினால் எனக்கு பயங்கர கோபம் வந்துரும். ஒரு பெண் பிள்ளையை பெற்றவர்கள் கஷ்டப்பட்டு கிளி போல் வளர்த்து பார்த்துக் கொள்வார்கள். பின் அந்தப் பிள்ளையை ஒருதன் தூக்கிட்டு போறது தான் புரட்சி காதலா?. இதுதான் சமூக நீதியான காதலா? இன்னைக்கு உங்ககிட்ட ஒரு பொருள் காணாம போகுதுன்னா கூட போயிட்டு கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க. இந்த வழக்கெல்லாம் எடுத்துக்காரங்க இல்ல. அது மாதிரி பெத்தவங்க ஒரு பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க. அந்தப் பிள்ளையை ஒருத்தன் தூக்கிட்டு போறானா அதுக்கு என்னங்க பாதுகாப்பு. ஒரு நாலு பேர் போயிட்டு கையெழுத்து போட்டால் அந்தப் பிள்ளைக்கு கல்யாணம் ஆயிடுமா? அப்போ பெத்தவங்களோட நிலை? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இதற்கு தீர்வு:

தொரிந்தது பேசிய அவர், இந்த சமூக நீதி போராளிகள் அனைவருமே தன் மகளுக்கு ஒரு சுய மரியாதை கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் அடுத்தவன் மகளுக்கு பண்ணட்டும். ஏன்னா, அப்பதான் அடுத்தவன் குடும்பத்தோட கஷ்டம் அவங்களுக்கு தெரியும். சாதி மதப் பிரிவினையை உண்டாக்கணும் அப்படின்ற எண்ணத்தில் தான் இதெல்லாம் நடக்குது. எந்த சமூக நீதியும் இதுல கிடையாது. இது நிறுத்தப்படணும்னா என்னோட வேண்டுகோள் என்னனா ‘பெத்தவங்க கையெழுத்து இல்லாம திருமணம் பண்ண முடியாதுன்னு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்’. அப்படி கொண்டு வந்துட்டாங்கனா இது போல நாடகக் காதல் எங்கேயும் நடக்காது. ஆணவ கொலை, சமூக பிரச்சனை, அடிதடி எதுவுமே நடக்காது என்று கூறியுள்ளார்.

ஜாதி பற்றி:

பின், ஜாதியிலே உயர்ந்த ஜாதி நம்ம பெத்த அம்மா தான். அதை தான் நான் பெத்தவங்க அப்படின்னு சொல்றேன். அது என்ன ஜாதியாக இருந்தால் என்ன?. இந்த சமூக நீதி எல்லா பெத்தவங்களுக்கும் சமம் தான். இந்த மாதிரி விழிப்புணர்வு எல்லாருக்கும் வரவேண்டும். நாளைய சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக தான் இந்த மாதிரி படம் நான் எடுத்திருக்கிறேன். இதையெல்லாம் சொல்வதால் எனக்கு ஜாதி வெறியா என்று கேட்டால், ஆமாம் எனக்கு ஜாதி வெறிதான். மேலும், ‘கவுண்டம்பாளையம்’ என்ற படத்தின் பெயர் எந்த ஒரு நோக்கிலும் வைக்கவில்லை என்றும், இந்த படம் ஜூலை 5 அம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement