யாசகம் கேட்ட குழந்தைகள், மனம் நெகிழ்ந்து 50 குழந்தைகளுக்கு சொந்த செலவில் படிப்பை பெற்றுத்தந்த அதிகாரி.

0
247
police
- Advertisement -

யாசகம் பெறும் குழந்தைகளுக்கு தனது சொந்த பணத்தில் பள்ளிக்கூடம் பற்றி பல குழந்தைகளை காப்பாற்றி வரும் காவல் அதிகாரி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
இந்த உலகில் எல்லா செல்வங்களும் அழிந்தாலும் அழியாத செல்வத்தில் ஒன்று கல்வி. கல்வி மட்டுமே நிலையான செல்வம். எவ்வளவு துயரங்கள் வந்தாலும் கல்வியை கைவிட கூடாது என்று பண்டைக் கால இலக்கியங்களிலேயே வலியுறுத்தும் கருத்து.

-விளம்பரம்-

பண்டைய காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அன்று தொடங்கி இன்று வரை நம் நாட்டில் விலைமதிப்பில்லாத செல்வமாக கல்வி திகழ்கிறது. இதனை உண்மைப்படுத்தும் விதமாக காவல்துறை அதிகாரி ரஞ்சித் யாதவ் செயல்பட்டிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் யாதவ். இவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

- Advertisement -

ஏழை குழந்தைகளுக்கு உதவும் அதிகாரி:

இவர் தன்னுடைய உள்ளூரில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக யாசகம் பெறுபவர்கள் குழந்தைகளை தன்னுடைய பள்ளியில் சேர்த்து வருகிறார். இவர்களுக்கு சிறப்பான முறையில் பாடங்களை நடத்தி வருகிறார் ரஞ்சித். இவரது முயற்சி மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

பள்ளி மாணவி கூறியது:

இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதனை அடுத்து பல சேனல்கள் இந்த பள்ளியை பேட்டி எடுத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த பள்ளியில் பயிலும் மாணவி இதுகுறித்து கூறியிருந்தது, இங்கு வருவது எங்களுக்கு பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறோம். இங்கே நல்ல முறையில் படித்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ரஞ்சித் பள்ளி நடத்த காரணம்:

இப்படி பல குழந்தைகளின் கல்விக்கு காவல் அதிகாரி ரஞ்சித் உதவி செய்து வருகிறார். இவர் இப்படி செய்யத் தொடங்கியதற்கு காரணம் குறித்து கேட்டபோது, ஒரு நாள் காலையில் குழந்தைகள் யாசகம் கேட்பதை ரஞ்சித் பார்த்திருக்கிறார். அப்போது அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் சென்று இது பற்றி விசாரிக்கிறார். அப்போது அவர்கள் வசதி இல்லாததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம். உதவி கிடைத்தால் நிச்சயம் எங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கூறியிருந்தார்கள்.

குவியும் பாராட்டுக்கள்:

இதனை அடுத்து தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு மரத்தடி பள்ளிக்கூடத்தை துவங்கி இருக்கிறார் ரஞ்சித். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகம் ஆகியவற்றையும் தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். தற்போது அவருடைய பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். பணி முடிவடைந்ததும் பள்ளிக்கு சென்று இவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். இவருடைய இந்த முயற்சிக்கு அந்த ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement