உலகத்தின் ‘Gamechanger’ நித்யானந்தா, கைலாசா தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் – ரஞ்சிதா பேச்சு.

0
1691
- Advertisement -

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா தான் என்று ரஞ்சிதா பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலி சாமியார் நித்தியானந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன் என்று சொல்லலாம். இந்து மத போதனைகளை போதிப்பவர் என்று கூறி பல பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் ஆசிரமங்கள் உள்ளன. அதோடு உலக அளவில் இவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. அதோடு இவர் தனியாக தனக்கென ஒரு தீவை உருவாக்கி கைலாசம் என்று பெயர் வைத்து இருக்கிறார். இந்துகளுக்கு என்று கைலாச எனும் ஒரு தனி நாடு ஒன்றை உருவாக்கி விட்டதாக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நித்தியானந்தா வெளியிட்டிருந்தார். இது குறித்த கருத்து எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. கைலாசா நாட்டுக்கு என்று ஒரு தனிக்கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்தது மட்டுமில்லாமல் அந்த நாட்டிலேயே குடியேற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்கள்.

- Advertisement -

நித்யானந்தா குறித்த சர்ச்சை:

இன்னொரு பக்கம், சர்வதேச போலீசார் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு நித்தியானந்தவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் நித்தியானந்தா தொடர்ந்து சொற்பொழிவை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் கைலாச நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடு சபை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது இது குறித்து கூட சமீபத்தில் புகைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு பெண் தூதர்களை நித்தியானந்தா அறிவித்திருந்தார்.

கைலாசா குறித்த தகவல்:

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மாநாடு கூட்டத்தில் கூட கைலாசா சார்பில் பிரதிநிதி விஜய பிரியா நித்யானந்தா கலந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் எல்லாம் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முக்கிய 30 நகரங்களுடன் கைலாசா சார்பில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிருக்கின்றது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை ரஞ்சிதா. இவர் கைலாசா நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது .அது மட்டும் இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருந்து அவர் கைலாச நாட்டை கவனித்து வருகிறார் என்ற தகவலும் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ரஞ்சிதா பேசியது:

பின் ரஞ்சிதா கைலாச சார்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கைலாசா என்றால் பரமசிவம் பக்கம் இருக்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்திக்கிறது. ஒன்று ஏ.ஐ.டெக்னாலஜி (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்)-செயற்கை நுண்ணறிவு, மற்றொன்று சி.ஐ.(காஸ்மிக் இன்டெலிஜென்ஸ்)-அண்ட நுண்ணறிவு. அது தான் கைலாசா. மேலும், இந்த உலகின் கேம் சேன்ஜராக சுவாமி நித்தியானந்தா இருக்கிறார். கைலாச முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது.

நித்தியானந்தா குறித்து சொன்னது:

கல்வி இலவசமாக கிடைக்கிறது. அசைவங்களும் அனுமதிப்பதில்லை. சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டு கால வாழ்க்கையில் தர்மத்தின் பக்கம் அவர் நின்று இருக்கிறார். தொடர்ந்து தர்மத்தின் பக்கமும் அவர் நிற்பார். இந்துக்களின் வரலாற்றை இந்தியாவில் இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், அதை போற்றி பாதுகாப்பும் தான் நித்தியானந்தவினுடைய பணி. பணம் பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும் நோக்கமும் அவருக்கு கிடையாது. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாச எப்போதும் முன்னுரிமை தருகிறது. உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்ணை தான் கைலாச அனுப்பி இருக்கிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்யவில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்று நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதமும் பெண்கள்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். சுதந்திரம், பாதுகாப்பு கைலாசாவில் தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement