தற்போது தன்னுடன் நடித்த தீபிகா படுகோனை காதலித்து வரும் ரன்வீர் சிங் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்களும் வந்த வண்ணமுள்ளது.இந்நிலையில் அடுத்த மாதம் ஐ பி எல் சீஸன் ஆரம்பிக்கயுள்ளதால் அதற்கான பல்வேறு விளம்பரங்களை ஐ பி எல் அமைப்பு செய்துவருகிறது.மேலும் ஐ பி எல் ஆரம்ப நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களை அழைத்துள்ளது ஐ பி எல் அமைப்பு.
இந்த ஆரம்ப விழா நிகழ்ச்சியில் ஒரு 15 நிமிடம் நடனமாட நடிகர் ரன்வீர் சிங் கை அழைத்துள்ள ஐபிஎல் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக தந்துள்ளது.பத்மாவதி படத்திற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரன்வீர் சிங்.தற்போது 15 நிமிட பாடலுக்கு நடனமாட 5 கோடி ரூபாய் சம்பளமாய் பெற்றுள்ளதை வைத்து பார்க்கும் போது ஐபிஎல் எவ்வளவு பெரிய வியாபாரம் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது




