ஹீரோவாகும் முன் தனது நண்பர்களுடன் சென்னையை சுற்றிப்பார்க்க வந்துள்ள கேப்டன். அறிய புகைப்படம்.

0
3770
vijayakanth
- Advertisement -

கேப்டன் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் அவர்கள் தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிப்பதை விட்டு முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். 1978 ஆம் ஆண்டிலே தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்து உள்ளார்.இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்தது கிடையாது. நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : ஹீரோவாவதற்கு விஜய் சேதுபதி துணை நடிகராக தலை காண்பித்த படங்களின் லிஸ்ட் – புகைப்படங்கள் இதோ.

- Advertisement -

இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். மேலும், நடிகர் விஜயகாந்த் அவர்கள் முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

தனது முதல் படத்திற்காக விஜயகாந்த் எடுத்து போட்டோ ஷூட்

விஜயகாந்த சினிமாவில் அறிமுகமானது 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்தது எஸ் ஏ சி தான். இந்த நிலையில் விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக தனது நண்பர்களுடன் சென்னையை சுற்றிப்பார்க்க வந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement