இணையத்தில் வைரலான Morph செய்யப்பட்ட மோசமான வீடியோ – புலம்பிய ராஷ்மிகா மந்தனா. உண்மையான வீடியோ இதோ.

0
388
- Advertisement -

சோசியல் மீடியாவில் தன்னை குறித்து வெளியான ஆபாச வீடியோவிற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பம் வளர்வதன் மூலம் நிறைய விளைவுகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல பேருடைய வாழ்க்கையும் சீரழித்து வருகிறார்கள். இதில் அதிகம் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பெண்களின் புகைப்படத்தை மாபிங்க் செய்து அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் லிப்டில் ராஸ்மிகா நுழைவது போன்று ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை போட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது ராஷ்மிகா கிடையாது. அது செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா மாற்றப்பட்டு இருப்பது என்று தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா டீவ்ட்:

இதுகுறித்து இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையாக இப்படியான ஒன்று எனக்கு மிகவும் பயத்தை உருவாக்கி இருக்கிறது.

செயற்கை தொழில்நுட்பம் குறித்து சொன்னது:

நான் மட்டுமல்ல இன்றைய உலகில் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்று நான் ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என்னை பாதுகாப்பவர்கள் உள்ள்ட்டோருக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஆனால், இந்த மாதிரியான ஒன்று என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

-விளம்பரம்-

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

இதனால் இதன் மூலம் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் ஒரே பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு படத்தில் ராஸ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது. இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதை அடுத்து ஹிந்தியில் இவர் ரன்பீர் கபருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்துஇருக்கிறார். இந்த படத்தை Sandeep Reddy Vanga இயக்கி இருக்கிறார். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement