பொண்ணுங்க மறந்துடும், பசங்க மறக்க மாட்டாங்க. அதுக்கு உதாரணம் நீங்க தான் – ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன முன்னாள் காதலர்.(ச்ச, என்னா மனுஷன்)

0
2015
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் ராஷ்மிகா ராஷ்மிகாவின் பிறந்தநாள் குறித்து போட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது தெலுங்கு, கன்னடம் இரண்டு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தியின் ‘சுல்தான் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிவித்துவிட்டார். இவர் நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு ஒரு நல்ல படமாக தான் அமைந்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமான முதல் படமான ‘கிரிக் பார்ட்டி ‘ படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் காதலில் விழுந்தார்கள். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்கள் திருமணமத்திற்கு முன்பாகவே பிரிந்துவிட்டனர். இவர்கள் பிரிந்த போது பலரும் ராஷ்மிகாவை திட்டி தீர்த்தனர். ஆனால், அப்போது கூட அவரை நிம்மதியாக விடுங்கள், அவள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி இருந்தார் ரஷீத்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இன்று ராஷ்மிகா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஷீத், தனது ட்விட்டர் பக்கத்தில், ராஷ்மிகா நடித்த முதல் படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்திற்காக ராஷ்மிகா செய்த முதல் ஆடிஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். க்ரிக் பார்ட்டியில் இருந்து உன் முதல் ஆடிஷன் வீடியோவை பகிர்கிறேன். நீ அப்போது இருந்து வெகு தூரம் பயணித்து உன் கனவுகளை ஒரு போராளி போல துரத்தி கொண்டு இருக்கிறாய். உன்னை நினைத்து பெருமையடைகிறேன்.

-விளம்பரம்-

பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும், நீ வெற்றிகளை சந்திப்பாய் ராஷ்மிகா என்று பதிவிட்டுள்ளார். ரஷீத்தின் இந்த பதிவை பார்த்த பலரும், ரசிகர்கள் பலரும் ரக்ஷித் ஷெட்டியின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர் உங்களின் வலி என்னவென்று புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ரஷீத்தின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள ராஷ்மிகா,ஆஆஆ, எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. நன்றி ரக்ஷித் என்று சிம்பிளாக பதில் அளித்துவிட்டார்.

Advertisement