அக்கம் பக்கத்துக்கு வீட்டாரால் ராஷ்மிகாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை. ரொம்ப பாவம் தான்.

0
2120
- Advertisement -

தெலுங்கில் “கீதா கோவிந்தம்” என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. இந்த படத்திற்கு பின் ராஷ்மிகாவை தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன!!. அதுமட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்து உள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா அவர்கள் கவர்ச்சியாக படத்தில் நடித்தால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பதாக ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசுகிறார். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர். மேலும்,இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. மேலும்,இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். நடிகை ராஷ்மிகா அவர்கள் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தற்போது தமிழிலும் கால் தடம் பதிக்கிறார்.

-விளம்பரம்-
Image result for rashmika mandana angry"

- Advertisement -

மேலும்,சினிமாவில் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் எனக்கு சினிமாவை பற்றியும், நடிப்பு பற்றியும் அதிகம் தெரியாது. மேலும், படப்பிடிப்புக்கு வந்து நடித்து விட்டு போனால் போதும் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால், அதை எல்லாம் தாண்டி ஒரு படம் வெற்றி பெறுவதற்கு விளம்பரம் தேவை என்பதை தெரிந்து கொண்டேன். சினிமாவில் எந்த உயரத்தில் இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்கு இறங்கி வந்தால் மட்டும் தான் படம் வெற்றியடையும் என்று உணர்ந்தேன். அதோடு மக்களிடம் ஒரு படம் செல்ல வேண்டுமென்றால் நாம் மக்களிடம் நெருங்கி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால், அதே சமயம் சினிமா துறைக்கு வெளியே பல கஷ்டமான சூழலை எல்லாம் நான் சந்தித்து உள்ளேன்.

இதையும் பாருங்க : யோகி பாபு கல்யாணம் பண்ணிக்கபோற பெண்னு சொல்றதே நான் தான். நடிகை வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

சமீபத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நான் நடித்து இருந்தேன். இந்த படத்தை பார்த்து அக்கம் பக்கம் உள்ள மக்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அதுமட்டும் இல்லாமல் என்னை பற்றி கேவலமாகவும் பேசினார்கள். மேலும், இது வெறும் நடிப்பு என்பது அவர்களுக்குப் என்னால் புரிய வைக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் என்னுடைய நண்பர்கள், தோழிகளும் எல்லாரும் நான் சினிமாவுக்கு வந்ததால் என்னுடன் நட்பை முறித்துக் கொண்டார்கள். மேலும், எனக்கு இது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது என்று மனவேதனையுடன் நடிகை ராஷ்மிகா கூறினார்.

-விளம்பரம்-
Image result for rashmika mandana angry"

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அவர்கள் நடிக்க இருக்கும் படம் ‘சுல்தான்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கிறார். மேலும்,இந்த படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் முடிந்தது. பின் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. அதுமட்டும் இல்லாமல் இது கார்த்திக்கின் 19 வது படமாகும். அதோடு இந்த படம் நடிகை ராஷ்மிகா மந்தண்ணாவுக்கு தமிழில் முதல் படம் ஆகும். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் அவர்கள் இசை அமைக்கின்றனர். அது மட்டுமில்லாமல் யோகி பாபு அவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement