யோகி பாபு கல்யாணம் பண்ணிக்கபோற பெண்னு சொல்றதே நான் தான். நடிகை வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
10538
Yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.

-விளம்பரம்-

அதே போல தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவதும் இவர் தான் என்று கூறப்படுகிறது. நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி கடந்த இரண்டு நாளாக வைரலாக பரவி வந்தது. சமீபத்தில் நடிகர் யோகி பாபு என்ற ஹெலோ வலைதள பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று பதிவிடபட்டிருந்தது.

இதையும் பாருங்க : இயற்கை பட நடிகையா இது. திருமணத்திற்கு பின் எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

மேலும், அந்த புகைப்படத்தில் அவளும் நானும் என்றும் குறிப்பிட்டுஇருந்தது. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இவங்க தான் உங்கள் வருங்கால மனைவியா என்று கமன்ட்களை செய்ய ஆரம்பித்துவிட்டனர் இந்த விஷயம் சமூக வலைதளத்தில் தீயாக பரவ பத்திரப்போன யோகி பாபு தனது சமூக வலைதளத்தில் தனது திருமணம் குறித்து விளக்கமளித்தார். அதில், என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுருந்தார்.

இந்த நிலையில் யோகி பாபு திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என்று யோகி பாபுவுடன் இருந்த அந்த பெண்ணே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யோகி பாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் நான் தான் என்று கூறப்பட்ட புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்றும், யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் தான் அது. ஆனால், நான் யோகி பாபுவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது முற்றிலும் தவறான தகவல் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement