தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதன் பின் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல்:
இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார். அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருந்தார். ஆண் சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

ராஷ்மிகா மந்தனா பேட்டி:
இதை அடுத்து ராஷ்மிகா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ரஷ்மிகா மந்தனா கூறியிருப்பது, என்னை பற்றி நிறைய நெகட்டிவ் கருத்துகள் வருகிறது. அப்போது என்னுடைய நண்பர்கள், நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை? என்று கேட்கிறார்கள். ட்ரோல், விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனுமே கிடையாது. பொய்களை பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:
மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டும்தான் கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளை பார்த்து, இது உண்மை இல்லை என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? பொய்க்களை பரப்புவோருக்கு பதில் அளித்தால் அவர்களை ஊக்குவிப்பது போல இருக்கும். அதை நான் ஏன் செய்ய வேண்டும்? சிலர் பணத்திற்காகவே பொய்யான கருத்துக்களை பரப்புகிறார்கள். நான் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறேன். சினிமாவிற்கு வந்தபோது எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இன்றும் இருக்கிறேன். முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார்.






