சினிமால வந்ததுல இருந்து என் கடந்த காலத்தை எல்லாம் Troll பன்றாங்க – வேதனை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா

0
754
rash
- Advertisement -

சமூக வலைத்தளத்தில் தன் மீது எழும் Trollகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியது முதலே நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதால் நடப்பவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பதும் தெரியும்.

- Advertisement -

அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது. என் வேலையின் இயல்பும் அதுதான். உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவதும் என் மனதை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

அதிலும் ஒரு நேர்காணலில் நான் பேசிய சிறிய விஷயம் எனக்கு எதிராக மாறியதையும் கண்டேன். மேலும், என்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான தகவல்கள் என்னை மட்டுமல்ல என்னைச் சார்ந்தவர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால், வெறுப்புகளையும், நெகட்டிவான விமர்சனங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, அதில் எந்த ஆக்கப்பூர்வமான விஷயங்களும் இல்லை.

-விளம்பரம்-

இதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், நாளுக்கு நாள் இது மோசமடைந்து வருகிறது. இதன் மூலம் நான் யாரையும் தாக்க முயற்சிக்கவில்லை. இதையெல்லாம் தாண்டி, உங்கள் அனைவரது அன்பையும் ஆதரவையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு மேலும் மேலும் ஊக்கமளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கு பெரிய தைரியதைக் கொடுக்கிறது.

என்னைச் சுற்றியுள்ளவர்கள், உடன் பணியாற்றுபவர்கள், என்னை நேசிப்பவர்கள்மீது எனக்கு எப்போதும் மிகுந்த அன்பு இருக்கிறது. அவர்களை மகிழ்விக்கத் தொடர்ந்து பணியாற்றுவேன். எப்போதும் நான் சொல்வதுபோல, உங்களை மகிழ்வித்து – நான் மகிழ்வேன்.” என்று பதிவிட்டிருக்கிறார். ராஷ்மிகாவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement