கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் ராஷ்மிகா நடந்துகொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.
தெலுங்கு ரசிகர்களை போல இவருக்கும் தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இதனால் இவர் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போது இவர் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன்.
இதையும் பாருங்க : ஆக்ஷன், ரௌடிசம், விவசாயம் ‘சுல்தான்’ படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.
தற்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து இவரது இயக்கத்தில் ‘சுல்தான்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கார்த்தி ராஷ்மிகா மந்தனா நெப்போலியன் லால் யோகிபாபு சதீஷ், KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (ஏப்ரல் 2) வெளியாகி இருக்கிறது. தமிழை போல தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று (ஏப்ரல் 1) ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ராஷ்மிகா பேசிய போது, மேடைக்கு அருகில் இருந்த சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா, சூர்யா என்று கோஷமிட்டனர். இதனால் கொஞ்சம் கடுப்பான ராஷ்மிகா கார்த்தி கார்த்தி’ என்று கோஷமிட்டு, ஏய் ச்சீ, சும்மா இருங்க, நான் பேசணும் எனக்கு பிளைட் இருக்கு. ஆனால், இந்த விழா மிஸ் அவகூடாதுனு தான் வந்தேன் என்று பேசிக்கொண்ட இருக்கும் போது ரசிகர்கள் மீண்டும் சூர்யா சூர்யா என்று கூச்சலிட, ஏய், என்ன பேச விடுங்கடா தயவு செய்து என்று பேசினார். ராஷ்மிகா என்னதான் இதை சிரித்தபடி பேசினாலும், இவரது இந்த பேச்சால் கடுப்பான ரசிகர்கள் ஓவர் நடிப்பு என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.