ஆக்ஷன், ரௌடிசம், விவசாயம் ‘சுல்தான்’ படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.

0
50907
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். தற்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து இவரது இயக்கத்தில் ‘சுல்தான்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு, சதீஷ், KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு போன்றவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், விவேக் – மெர்லின் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கும் BGM மட்டும் யுவன் போட்டுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-
It's a wrap for Karthi's Sultan- Cinema express

கதைக்களம் :

- Advertisement -

அடாவடி செய்து வரும் ரௌடிகளை வைத்து விவசாயத்தை செய்ய விடாமல் தடுக்கும் கார்பெர்ட்களை ஒழித்து, ரவுடிகளை எப்படி நல்லவர்களாக மாற்றுகிறார் சுல்தான் என்பது தான் படத்தின் ஒன்லைன். படத்தில் கார்த்தியின் அப்பாவாக வரும் நெப்போலியன் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவராக இருக்கிறார். அவருக்கு கீழ் பல விசுவாசமான அடியாட்கள் இருக்கிறார்கள். இவரின் மகனாக வரும் கார்த்தி சிறு வயதிலேயே அம்மாவை இழந்து இந்த ரௌடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் நெப்போலியன் இறந்து விட பின் இந்த ரௌடி கேங் சுல்தானாகிய கார்த்தி கையில் வருகிறது.

இதையும் பாருங்க : கமல் – ராதிகா தேர்தல் பிரச்சாரம். சகுனி படத்தோடு ஒப்பிட்டு மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

ஆனால், அவர்களை ஒரு அடியாட்கள் போல பயன்படுத்திகொள்ளாமல், அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைஉயர்த்த நினைக்கிறார் கார்த்தி. நெப்போலியன் இறக்கும் முன்னர் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்ய விடமால் அந்த கிராமத்தை கார்ப்ரேட் நிறுவனம் பிடியில் ஒப்படைக்க வில்லன் ஒரு கிராமத்தில் உள்ளவர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகிறார். அவர்களின் கிராமத்தை நெப்போலியன் காப்பற்றி தருவதாக சத்தியம் செய்கிறார். இப்படி ஒரு நிலையில் நெப்போலியன் இறந்துவிட நெப்போலியன் செய்து கொடுத்த சத்தியத்தின்படி அந்த கிராமத்தை சுல்தான் காப்பாற்றினாரா ? தன்னை எடுத்த வளர்த்த ரௌடி கும்பலை வன்முறையில் ஈடுபடாமல் எப்படி தடுக்கிறார். அவர்களை எதிர்க்க தன்னுடைய முரட்டு தனமான கேங்கை பயன்டுத்துகிறார் கார்த்தி. இறுதியில் என்ன ஆனது ? விவசாயத்தை ரௌடிகளை வைத்து கார்த்தி காப்பற்றினாரா ? என்பது தான் கதை.

-விளம்பரம்-

பிளஸ் :

படத்திற்கு பிளஸ் இது தான் என்று சொல்ல கார்த்தியின் நடிப்பும் யுவனின் BGM தான்.ரௌடிகள் டு விவசாயி ஒரு வித்யாசமான கதைகளம்.

இதுநாள் வரை தெலுங்கு டப் படங்களில் மட்டுமே பார்த்து வந்த ராஷ்மிகாவை நேரடி தமிழ் படத்தில் பார்த்தது கொஞ்சம் ப்ரெஷ். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஓகே,

கமர்ஷியல் படமாக இருந்தாலும் படத்தில் விவசாயத்தை பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் பலம் தான், விவசாயத்தை மட்டும் சொல்லி போர் அடிக்காமல் அதில் கமெர்ஷியல் விஷயத்தையும் சேர்த்துள்ளார் இயக்குனர்.

யோகி பாபு, ரௌடி கும்பலின் ராவான காமெடி, சென்ராயன் காமெடி ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கிறது.

KGF பட வில்லனை இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து இருந்தாலும் பெரிதாக பயந்துபடுத்திகொள்ளவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்.

மைனஸ் :

கார்த்தியின் கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபத்திரத்திற்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் வழக்கம் போல தான்

முதல் பாதி சுமார் இரண்டாம் பாதி கொஞ்சம் லெந்தாக செல்கிறது, படம் மிகவும் நீளம்

சுலபாகக கணிக்கக்கூடிய அடுத்தடுத்த காட்சிகள், கோட் ஸ்யூட் போட்ட வில்லன் படத்தில் எதற்கு என்றேதெரியாது , பேசாமல் KGF வில்லனையே மெயின் வில்லனாக போட்டு இருக்கலாம்.

திரைக்கதையில் பல இடங்களை பார்க்கும் போது தெலுங்கில் பாலைய்யா ஆக்ஷன் படங்களை பார்ப்பது போல தான் இருந்தது.

இறுதி முடிவு :

சமீப காலமாகவே கார்த்தியின் படங்கள் மிகப்பெரிய தோல்வியை கண்டு வருகிறது. தேவ் திரைப்படம் படு தோல்வி அடைந்த பின்னர் கைதி திரைப்படம் கைகொடுத்தது. ஆனால், அடுத்து வந்த தம்பி திரைப்படம் படு தோல்வி உடைந்தது. அந்த வகையில் இந்த சுல்தான் திரைப்படம் தேவ், தம்பி திரைப்படத்தை ஒப்பிடும் போது ஓகே தான் என்றாலும் கைதி படத்திற்கு பக்கம் கூட நிற்காது. இந்த படத்திற்கு நம் Behindtalkies-ன் மதிப்பி 6/10. அதுவும் கமெர்சியல் படம் என்று பார்த்தால் மட்டும். கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement