புஷ்பா படத்திற்கு பின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ராஷ்மிகா – ஷங்கர் படத்தில் அரை மணி நடிக்க எவ்ளோ கேட்டுள்ளார் பாருங்க.

0
592
- Advertisement -

அரை மணி நேரம் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு கோடி ரூபாய் கேட்டு உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், இளைஞர்களின் கிர்ஷாகவும் திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார்.

- Advertisement -

புஷ்பா படம்:

இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் இந்த சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.

நடிகைகளின் சம்பள உயர்வு:

முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அரை மணி நேரம் மட்டும் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே வளர்ந்து வரும் நடிகைகள் தங்களுடைய படம் ஹிட்டாகி விட்டால் போதும் அடுத்த படத்திலேயே தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். சமீபத்தில் கூட 3 கோடி சம்பளம் வாங்கி இருந்த பூஜா ஹெக்டே திடீரென்று 5 கோடி ரூபாய் என்று சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

-விளம்பரம்-

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புது படம்:

தற்போது இவர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதற்கு பிறகு இவர் எவ்வளவு சம்பளம் வாங்கப் போகிறார் என்று தெரியவில்லை. இந்த பட்டியலில் தற்போது ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இவர் புஷ்பா படத்துக்கு 2 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கி இருந்தாலர். இப்போது தான் நடிக்கப்போகும் புதிய படத்திற்கு நான்கு கோடி ரூபாய் கேட்டு வருகிறார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அரைமணிநேரம் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். தெலுங்கில் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘ஆர்.சி15’ என்ற படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் RRR படம் உருவாகி இருக்கிறது.

அரைமணி நேரத்திற்கு ராஷ்மிகா மந்தனா கேட்ட சம்பளம்:

இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ராம் சரணை பேட்டி எடுப்பது போன்று காட்சி இடம்பெறுகிறது. இதில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழு கேட்டு இருக்கிறது. பின் இந்த காட்சி வெறும் அரை மணி நேரம் தான் இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், ராஷ்மிகா மந்தனா அரைமணிநேரம் காட்சியில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து வேற வழியில்லாமல் தர ஒப்புக் கொண்டதாக டோலிவுட் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement