எங்க இருந்து வந்தோம்னு மறந்துட்டார், ராஷ்மிகா மீது கொந்தளித்த ரசிகர்கள் – இனி கன்னட படங்களில் நடிக்க தடையா ?

0
379
rashmika
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிப்பதாக சினிமா வட்டாரங்களில் வெளியான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை எப்படுத்தியுள்ளது. எல்லா நடிகர்களும் சினிமாத்துறைக்கு வந்த சிறிதுகாலத்தில் பிரபலமாக ஆவதில்லை. ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சினிமாத்துறையில் வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் தெலுங்கு கன்னடம் என கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் இப்போது கலக்கி வருகிறார்.

-விளம்பரம்-

ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் 2017ஆம் ஆண்டு வெளியான “கிர்க் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகிறார். 4கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படமானது 50கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்து. அதனை தொடர்ந்து “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்க்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார் ராஸ்மிகா மந்தனா. பின்பு இவர் நடித்திருந்த “கீதா கோவிந்தா” திரைப்படம் 15 மடங்கு லாபம் கொடுத்து மெகா ஹிட்அடித்தது.

- Advertisement -

மேலும் இப்படத்திற்கு தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, என பல துறைகளில் பல விருதுகளையும் பெற்றது.இப்படி இவர் நடித்து வந்த படங்கள் எல்லாமே ஹிட் அடிக்கவே இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி தமிழிலும் பிரபலமானார். ஆனால் இவர் “பிகில்” படத்தில் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு பிறகு பல முன்னணி பிரபலங்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு என்று பலரின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா நடிகர் அல்லு நடித்திருந்த “புஷ்பா” படத்தில் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படி மற்ற மொழிகளில் கலக்கிவரும் ராஷ்மிகா தற்போது இந்தியாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுடன் இணைந்து “குட் பாய்” என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்து விட்டார்.இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி தயாரித்திருந்த திரைப்படமான “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்பாடத்தின் போதே ரக்சித் ஷெட்டி மற்றும் மந்தனா ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. பின்னர் ராஷ்மிகா நடித்த படங்கள் தெடர்ந்து வெற்றியடையவே திருமணத்தில் இருந்து விளக்கினார். இப்படி இருக்கும் போது ஏற்கனவே நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோவமடைந்துள்ளார். அதாவது தற்போது கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா” திரைப்படத்தை பற்றி பேசியதால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்ச்சனத்திற்கு உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தான் எங்கிருந்து வந்தோமோ அதை மறந்து விட்டு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருவதாக இவரின் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவரை முழுவதுமாக கன்னட சினிமாவில் நடிக்க தடை போடுவது குறித்து பேசி வருவதாக ட்விட்டர பதிவு ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தடையானது ராஷ்மிகா தற்போது நடித்து வரும் புஷ்பா 2 மற்றும் வாரிசு படத்திலிருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி ஷோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Advertisement