விமான நிலையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. சமீபகாலமாகவே ரசிகர்கள் பிரபலங்களுடன் செல்பி எடுக்கும் மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. பொது வழியில் பிரபலங்களை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விடுகிறார்கள். பின் அவர்களுடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார்கள். இதனால் பல பிரபலங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது.
சில பேர் செல்ஃபி எடுக்கலாம் என்று அத்துமீறல் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் மும்பை விமானத்தில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனாவிடம் அத்துமீறிய செயல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா மும்பை விமான நிலையத்திற்கு வந்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகா உடன் செல்பி எடுக்க முயற்சித்தார்.
விமான நிலையத்தில் ராஷ்மிகா:
உடனே அவர், ராஸ்மிகா கையை இழுத்து போஸ் கொடுக்க சொல்லி இருக்கிறார். இதனால் பயந்துபோன ராஷ்மிகா மந்தனா தள்ளி நின்றார். பின் ராஷ்மிகா எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரிடம் நின்று செல்ஃபிக்கு போஸ் கொடுத்திருக்கிறார். தற்போதைய இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:
மேலும், தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
ராஷ்மிகா குறித்த தகவல்:
அதன் பின் இவர் இந்த தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் நடித்த விஜயின் ‘வாரிசு’ படம் பெரிய அளவு வெற்றியடையவில்லை. கடைசியாக இவர் ஹிந்தியில் வெளியாகி இருந்த ‘அனிமல்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் படத்தில் பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார்.
ராஷ்மிகா நடிக்கும் படங்கள்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா படு கிளாமராக நடித்து இருந்தார். தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘குபேரா’ என்ற படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.