ராஷ்மிகா மந்தனா சந்திக்க விரும்பும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பாடல் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
புஸ்பா படம்:
இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
விஜய் படத்தில் ராஷ்மிகா:
ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து வருகிறார்.
வாரிசு படம்:
இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா தேடும் நபர் :
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தேடும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் புஷ்பா. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. அதிலும், வாயா சாமி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது. இந்த பாடலுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள்.
ராஷ்மிகா பதிவு:
இந்த நிலையில் இந்த பாடலுக்கு பள்ளி சிறுமி ஒருவர் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது. இந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து, இந்த கியூட் சிறுமியை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். யாராவது ஹெல்ப் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார். ராஸ்மிகா மந்தனாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கூடிய விரைவிலேயே இந்த சிறுமையை ரஷ்மிகா மந்தனா நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.