காந்தாரா படம் குறித்து ராஷ்மிகா சொன்ன பதில் கன்னட ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில் அவருக்கு கன்னட திரையுலகில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமாவை பிரமிக்க வைத்த படங்களில் ஒன்று காந்தாரா. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
https://twitter.com/RamThirthahalli/status/1595405836985470976
இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் தயாரிப்பாளர் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டுஇருந்தது.
தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது.
https://twitter.com/Shivabasavabha1/status/1595037322550349824
அதே போல அந்த பேட்டியில் தனது முதல் படமான கிரீக் பார்ட்டி பற்றி பேசி இருந்தார். ஆனால், அந்த படத்தை தயாரித்த ரக்ஷித் செட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இதனால் கடுப்பான கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா, தன்னை அறிமுகம் செய்துவைத்த நிறுவனத்தையே மறந்துவிட்டார். அவருக்கு கன்னடத்தில் ஆதரவு கொடுக்கக்கூடாது என்று எதிர்புகள் எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் சமந்தா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ரிஷப் ஷெட்டி கூறியிருந்தது, என்னுடைய படத்தின் கதையை எழுதி முடித்ததுமே அதற்கான நடிகர்களை நானே முடிவு செய்கிறேன். புது முகங்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதால் அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அதனால் நீங்கள் சொன்ன இந்த பிரபலங்களுடன் நான் பணியாற்ற விரும்பவில்லை. ஆனால், சாய்பல்லவி மற்றும் சமந்தாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார். இதன் மூலம் ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகாவிற்கு பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கூறி வந்தனர்.
https://twitter.com/RamThirthahalli/status/1595405836985470976
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அதில் 'என்னிடம் காந்தாரா படம் பார்த்தீர்களா என்று அந்த படம் வெளியான இரண்டு மூன்று நாட்கள் கழித்து கேட்கப்பட்டது. அப்போது நான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் பார்க்கவில்லை. அதன் பின்னர் அந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கும் மெசேஜ் அனுப்பினேன். அவர்களும் என்னுடைய மெசேஜிற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்த உலகத்திற்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது.
அனைவரும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கேமரா வைத்து காட்ட முடியாது என்று கூறியிருக்கிறார். அதேபோல கன்னட திரைப்படங்களில் நடிக்க தனக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று உலவி வரும் செய்தி குறித்து பேசிய ராஸ்மிகா ' சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக்கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டுகொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.





