தனக்கு நடந்த வருமான வரி சோதனை குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில்நடித்து இருந்தார். தெலுங்கு மற்றும் கன்னட மொழியை தொடர்ந்து தற்போது கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழிலும் கால்பதிக்க உள்ளார். இந்த நிலையில் ஆண்டு ஜனவரி மாதல் 16 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். கோடகுவின் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள நடிகைகளின் வீட்டில் ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் தேடுதல் நடத்தினர்.

இதையும் பாருங்க : 10 ரூபா மாஸ்க உள்ளாடையை மாத்திட்டீங்களா ? கேலிக்கு உள்ளான ஸ்ருதி ஹாசனின் நீச்சல் உடை புகைப்படம்.

Advertisement

ஆனால்,அப்போது ரஷ்மிகாவின் தந்தையார் மட்டும் தான் இருந்துள்ளார். காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை அடுத்த நாள் வரை தொடர்ந்தது.இந்த சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஇருந்தது. இதுகுறித்து ஓராண்டு கழித்து மௌனம் கலைத்துள்ளார் ராஷ்மிகா.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “நான் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக அப்போது தகவல் பரவியது. அந்த செய்திகள்தான் வருமானவரி துறையினர் சோதனைக்கு காரணம். உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. உங்களுக்கு எப்படி தர முடியும் என்பார்கள். நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கி இருப்பது பற்றி பேசுகிறார்கள். ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்ததால் வீடு வாங்கினேன் என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Advertisement