ஏர்போர்ட்டில் ராஷ்மிகா மந்தனா தந்த க்யூட்டான ரியாக்சன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ராஷ்மிக மந்தனா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார்.
இந்த படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார்.
புஸ்பா படத்தில் ராஷ்மிகா :
இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில், அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் கால்தடம் பதிக்கும் ராஷ்மிகா :
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் மிகுந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு புஸ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய வாய்யா சாமி பாடல் இளசுகள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், புஷ்பா படத்தின் மூலம் இவருக்கு இந்தியிலும் மிகப் பெரிய அளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இவர் இந்தியில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏர்போர்ட்டில் ராஷ்மிகா மந்தனா:
பாலிவுட் படத்தில் ராஷ்மிகா கால்தடம் பதிக்க இருக்கிறார். இதனால் இவரை அடிக்கடி மும்பையில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நேற்று ராஷ்மிகா மந்தனா விமான நிலையம் சென்றிருக்கிறார். இவரை பார்த்தவுடன் மீடியாக்காரர்கள் எல்லோரும் சூழ்ந்து படமெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். வழக்கமாக மற்ற பிரபலங்கள் மீடியாக்காரர்களுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விடுவார்கள். ஆனால், ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டு நடந்து செல்கிறார்.
வைரலாகும் ராஷ்மிகா மந்தனா வீடியோ:
எப்படி இருக்கிறீர்கள் என ராஷ்மிகா கேட்க எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என பதில் சொல்கின்றனர். பின் ராஷ்மிகா, கேமராவில் இருந்து வரும் ஃப்ளாஷ் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று அவர்களிடம் கூறுகிறார். அப்போது ஒருவர், நீங்கள் க்யூட் என சொல்கிறார். உடனே அப்படியா, நன்றி என்று அழகாக ரியாக்ஷனில் ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார். ராஷ்மிகாவின் இந்த ரியாக்ஷனை பார்த்த பலர் ஓவர் ஆக்தீங்கின் உலகம், ஏன் இப்படி பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு சீன போட்றீங்க என்று விமர்சித்து வருகின்றனர்.