5 வயதிலேயே தமிழ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் ராஷ்மிகா- அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
30096
rashmika-mandanna
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது அவர் சிறு வயதில் இருக்கும் போது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம். பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

இது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மாத இதழலின் புகைப்படம். இதை என்னுடைய அம்மா பத்திரமாக வைத்து உள்ளார். அதோடு அவர் என்னுடைய எல்லா விளம்பர புகைப்படத்தையும் பாதுகாத்து வைத்துள்ளார். எல்லாருமே தன்னுடைய வேலையில் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். தங்களுடைய லட்சியத்தை அடைய பல மைல் கல்களை சந்திக்க வேண்டும் என்ற பதிவிட்டு பின் சாரி, நான் ரொம்ப அதிகமா பேசுற மாதிரி இருக்கு என்று வேடிக்கையாக கூறியிருந்தார். இப்படி இவர் பதிவிட்ட புகைப்படமும், கருத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும், நடிகை ராஸ்மிகா அவர்கள் குழந்தை வயதில் கோகுலம் என்ற மாத இதழுக்காக எடுத்துக் கொண்ட மாதிரியே தற்போது புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் ரெமோ பட இயக்குனர் இயக்கி வரும் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார். இது தான் இவரது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement