நிச்சயதார்த்தம் வரை சென்ற ரஷ்மிகா மந்தனாவின் காதல். காதலி குறித்து உருக்கமாக பேசிய காதலர்.

0
22589
rashmika-mandanna

“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார். மேலும், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது தெலுங்கில் இரண்டு படம், கன்னடத்தில் இரண்டு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் ஏற்கனவே விஜய் 63 படத்தில் நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அது நடக்காததால் இவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்தார்கள். ஆனால், தற்போது இவர் கார்த்திக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

Image result for rashmika mandanna rashith shetty engagement

- Advertisement -

தேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பது நடித்த ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா. இதனைபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் காதலில் விழுந்தார்கள். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை 2018 ஆம் ஆண்டிலேயே பிரிந்து விட்டனர். “அவனே ஸ்ரீமன் நாராயணன்” என்ற படத்தில் ரக்ஷித் ஷெட்டி -ஷானாவி ஸ்ரீவத்சா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி அவர்கள் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும், இந்த படத்தை சச்சின் ரவி என்கிற அறிமுக இயக்குநர் இயக்கி உள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி அவர்கள் தன் காதல் குறித்தும், காதலி குறித்தும் பேசி உள்ளார்.

-விளம்பரம்-
Image result for rashmika mandanna rashith shetty engagement

அதில் அவர் கூறியது, மனக்கசப்புகள் காதலில் மட்டும் நிகழ்வது இல்லை. நட்பிலும் கூட நிகழ்கிறது. எல்லா விஷயங்களும் ஏதோ ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது. இது அனைத்தும் ஒரு பாடமாக எனக்கு கற்றுத் தருகிறது. மேலும், ராஷ்மிகா மந்தனா பெரிய லட்சிய கனவை வைத்து உள்ளார். அவரது கனவு பற்றி எல்லாம் எனக்கு தெரியும். அது மட்டும் இல்லாமல் அவருடைய கடந்த காலம் என்னவென்று கூட எனக்குத் தெரியும். அதனால் அவருடைய கனவு எல்லாம் நிஜமாக வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement