“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார். மேலும், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர்.
வாரிசு படம் :
தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்த ராஷ்மிக்கா மந்தனா சாமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் பல காலம் கழித்து குடும்ப கதையில் நடித்திருந்தார். இடத்தை இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க, தில் ராஜு தயாரித்திருந்தார். மேலும் கடந்த சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, யோகிபாபு என பலர் நடித்த இப்படம் கடந்த பொங்கலன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை பெற்றிருந்தது.
சர்ச்சைகள் :
தற்போது வரையில் “வாரிசு” படம் சுமார் 300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் முதல் நான் துணிவு தான் அதிக பணம் வசூல் செய்திருந்தது இதனால் இந்த தகவல் உண்மைதானா என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியான போதே பல சர்ச்சைகள் ஏற்பட்டது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனா உடை கடுமையாக விமர்சிக்கப்பட்டு நெட்டிசன்களும் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்த்தனர்.
விமர்சங்களை பற்றி கலவைபடாத ராஷ்மிகா :
இருந்தாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்திலும், அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தன்னை பற்றி என்ன விமர்சனம் வந்தாலும் அதனை “என்ன வேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்ப” என்றவாறு சினிமாவில் கலக்கி வருகிறார். அதோடு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து “குட் பாய்” என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து விட்டார். இப்படி அசுரர் வேகத்தில் வளர்ந்துவரும் ராஷ்மிகாவை பற்றி தற்போது ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரஷ்மிகாவை பற்றிய மீம்ஸ் :
அதாவது மீம்ஸ் ட்விட்டர் பக்கம் ஓன்று ராஷ்மிக்கா மந்தனா வெறும் 5 வருட சினிமா வாழ்க்கையில் 5 வெவ்வேறு நகரங்களில் 5 ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருப்பதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டு பல சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் பதிவிட்டிருந்தது. இந்த ட்விட் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகவே பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தான் ராஷ்மிக்கா மந்தனா அந்த மீம்ஸுக்கு பதிலளித்துள்ளார்.
கிண்டல் செய்த ரஷ்மிக்கா :
ராஷ்மிக அந்த அந்த புகைப்படத்திற்கு கீழ்லே “இந்த தகவல் உண்மையாக இருக்க விரும்புகிறேன்” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர் ட்விட்டர் பக்கத்திற்கு பதிலளித்த ரஷ்மிக்கா இந்த தகவலை பரப்பியவர் யார் என்று தெரியவில்லை ஆனாலும் இந்த தகவல் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகிறது.