ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரை பாதுகாவலர்கள் இழுத்து வீசி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
ராஷ்மிகா மந்தனா நடித்த படங்கள்:
அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.
View this post on Instagram
ராஷ்மிகா நடிக்கும் படங்கள்:
இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு.
விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா:
தற்போது இவர் ரன்பீர் கபருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க நெருங்கிய போது ராஷ்மிகா செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது.
ராஷ்மிகா செய்த செயல்:
அதில் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா உடன் செல்ஃபி எடுக்க போனை தூக்கி பிடித்தபடியே அவர் முன் வந்திருக்கிறார். அப்போது ராஸ்மிகாவை சுற்றி இருந்த பாடிகார்டுகள் அந்த ரசிகரை இழுத்து வெளியே தள்ளியிருக்கின்றனர். இதனால் பதறிப் போன ராஷ்மிகா அவரை விடுங்கள் என்று கை சைகை செய்து அவருடன் செல்பி எடுத்து இருக்கிறார். பின்னர் இன்னோரு பெண் செல்ஃபீ எடுத்த போது சீக்கிரம் சீக்கிரம் என்று கூறினார். தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.





