-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

Deep Fake வீடியோ வந்தப்ப குதிச்சீங்க, இப்போ இது என்ன? பாலிவுட் படத்தில் எல்லை மீறி இருக்கும் ராஷ்மிகாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
343

அனிமல் படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனாவை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை.

அனிமல் படம்:

-விளம்பரம்-

இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடைய தந்தையாக அணில் கபூர் நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக அணில் கபூர் இருக்கிறார். இவர் தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், தன்னுடைய தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர். தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

படத்தில் ராஷ்மிகா:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. கதைக்களமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமாக இல்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரு கிளாமர் ரோலுக்காகவே அவரை இந்த பயன்படுத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரசிகர்கள் விமர்சனம்:

ஏற்கனவே அவருடைய லிப் லாக் காட்சி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் படத்தில் இவர் நிறைய கிளாமராக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய இந்த காட்சிகளை பகிரும் நெட்டிசன்கள் பலர் நீங்கள் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் Deep Fake வீடியோ பற்றி கொதித்தது என்று கேலி செய்து வருகின்றனர். மேலும், பாலிவுட் சென்றாலே இப்படித்தானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும், கடைசியாக தமிழில் இவர் விஜய்யின் வாரிசு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது. இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news