கோவை சரளா Lite ‘ரஞ்சிதமே’ பாடலால் கேலிக்கு உள்ளான national crush ராஷ்மிகா. வைரலாகும் Memesகள் இதோ.

0
329
rashmika
- Advertisement -

விஜய் நடித்து இருக்கும் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் நிலையில் ராஷ்மிகாவை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன்இசையமைத்து இருக்கிறார்.

முதல் பாடல் :

இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ஒன்று வெளியானது.

-விளம்பரம்-

விஜய் பாடிய பாடல் :

ரஞ்சிதமே என்று துவங்கும் இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். பொதுவாகவே, விஜயின் படம் என்றாலே அவருடைய நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்த படத்தின் பாடல் ஒரு தரப்பு ரசிகர்களால் விரும்பப்பட்டாலும் ஒரு தரப்பு ரசிகர்களால் Troll செயயப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த பாடல் மொச்சகொட்ட பல்லழகி பாடல் போல இருக்கிறது என்று கேலி செய்து வருகின்றனர்.

கேலிக்கு உள்ளான ராஷ்மிகா :

அதே போல இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருக்கிறார். ஏற்கனவே இவர் விஜய்க்கு கொரியோகிராப் செய்த அரபிக் குத்து பாடல் நடனம் பெரும் கேலிக்கு உள்ளத்து. அதே போல இந்த பாடலின் ஸ்டெப்களும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ராஷ்மிகாவின் லுக்கும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. ராஷ்மிகாவை கரகாட்டக்காரன் கோவை சரளாவுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement