ரஸ்னா விளம்பரத்தில் நடிச்ச குட்டிப் பொண்ணு இப்போ என்ன பன்றாங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
2173

சிறு வயதுள்ள ஒரு ரஸ்னா விளம்பரம் வரும் தெரியுமா? அதில் ரஸ்னா குடிப்பது போல ஒரு குழந்தை வரும் தெரியுமா? அந்த குழந்தை பெயர் அங்கிதா ஜவேரி. அங்கீதா ஜவேரி தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?


சிறுவயதில் அந்த ரஸ்னா விளம்பரத்தில் நடித்ததுதான் மூலம் பிரபலமானார் அங்கிதா ஜவேரி. பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் வடிவேலு என பலர் நடித்த ‘லண்டன்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் தகதிமிதா, திரு. ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் சிம்ஹத்ரி படத்தில் நடித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அனைத்து மொழிகளிலும் இவருக்கு வரவேற்பு குறைந்தது.

பின்னர், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜெகதாப்பை 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.