ரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது. இப்போ பாத்தா ஷாக்காகிடுவீங்க.

0
45117
rasna
- Advertisement -

தற்போது ரஸ்னா ஜூஸாக பல விளம்பரங்கள் வந்து கொண்டு இருகின்றன. தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பல விளம்பரங்களை நாம் பார்த்து இருப்போம். அதுல ஒரு சில விளம்பரம் தான் நம்ம மனசுல அதிகமாக இருக்கும். சொல்லனும்னா சினிமா உலகில் எவ்வளவு படம் பார்த்து இருந்தாலும் நம் மனதிற்கு பிடித்த படம் என்று சொன்னால் நாம் ஒரு சில படங்களை தான் சொல்லுவோம். அந்த மாதிரி டிவியில் வந்த விளம்பரங்களில் நம் கவனத்தை அதிகமாக ஈர்த்த விளம்பரம் என்று பார்த்தால் இந்த “ரஸ்னா குளிர்பானம்” விளம்பரம் தான். அதில் நம்ம சின்ன வயசுல வந்த ரஸ்னா விளம்பரத்தை நம்ம பார்த்திருப்போம். மேலும்,சில பேர் அந்த விளம்பரத்தை பார்த்திருக்க மாட்டார்கள். மேலும், பல வருடங்களுக்கு முன்னால் எடுத்த ரஸ்னா விளம்பரத்தை பற்றி பல கருத்துக்கள் இணையங்களில் எழுந்து வருகின்றன. மேலும்,அந்த ரஸ்னா விளம்பரத்தில் ரஸ்னா குடிப்பது போல இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா? அந்த குழந்தை பெயர் ‘அங்கிதா ஜவேரி’. அதோடு அங்கிதா இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்க? வாங்க அங்கிதா ஜவேரி பத்தி பார்க்கலாம்…

-விளம்பரம்-
Image result for actress ankitha jhaveri"

நடிகை அங்கிதா தன்னுடைய சின்ன வயதிலேயே ரஸ்னா விளம்பரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். அங்கிதா ஜவேரி அவர்கள் தன்னுடைய ரஸ்னா குளிர்பான விளம்பரத்தின் மூலம் பிரபலங்களிடமும், மக்களிடையேயும் பயங்கர வரவேற்பை பெற்றார். பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “லண்டன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும்,இந்த படத்தில் அங்கிதா அவர்கள் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் வடிவேலு, விஜயகுமார், ஸ்ரீவித்யா,நளினி,மணிவண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

- Advertisement -

அதன் பிறகு அங்கிதா அவர்கள் தமிழில் தகதிமிதா, திரு. ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும், அங்கிதா தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். உடன் ‘சிம்ஹாத்ரி’ படத்திலும் நடித்திருந்தார். இப்படி பல படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த அங்கிதாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் சினிமா துறையில் படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.பின் அங்கிதா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை செல்லாமல் குடும்ப வாழ்க்கையில் புகுந்தார்.

Image result for actress ankitha jhaveri"
Image result for actress ankitha jhaveri"

பின்னர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜெகதாப்பும், அங்கிதாவும் காதலித்து வந்தார்கள். பின்னர் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து அங்கிதா அவர்கள் அங்கேயே செட்டில் ஆகிட்டார் என்று கூட சொல்லலாம். அங்கிதா திருமணத்திற்கு பிறகும் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.மேலும்,அவர் தன்னுடைய முழு கவனத்தையும் குடும்ப பொறுப்பில் செலுத்தி வந்தார். அதனால்,தற்போது நடிகை அங்கிதா அவர்கள் அம்மாவாகி உள்ளார் என்றும்,மேலும்,இந்த தம்பதினருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அங்கீதாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement