ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் கிறிஸ்டோபர் யார் என்பதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்டோபறும் பங்கேற்றிருந்தனர். பலரும் அவர் அயல் நாட்டு நபராக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நம்ம ஊரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
அவ்ருடைய உண்மையான பெயர் சரவணன், படத்தில் கொடூரமான வில்லனாக இருந்த சரவணன் நேரில் மிகவும் பவ்யமான சாது போல தோற்றமளித்தார். மேடையில் அவரை அறிமுகபடுத்தும் வரையில் அவர் தான் கிறிஸ்டோபர் என்று யாரும் யூகிக்கவும் இல்லை.




