ராட்சசன் படத்தில் நடித்த வில்லன் இந்த சீரியலில் நடித்துள்ளாரா?வெளியான புகைப்படம்..!

0
542

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

Yasar

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால், ராட்சசன் படத்தில் சிறு வயது கிறிஸ்டோபராக நடித்தவர் யார் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றது.

Yasir

அவருடைய பெயர் யாசர்,சேலத்தை சேர்ந்த பகுதி நேரத்தில் வேலை செய்துகொண்டே சென்னையில் தனது படிப்பை முடித்துள்ளார். எந்த வித சினிமா பின்பலமும் இல்லாதா இவர் மை டியர் பூதம் என்ற தொடரிலும் நடித்துள்ளார்.அதே போல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குலதெய்வம்’ என்ற தொடரில் வெற்றிவேல் என்ற கதாபத்திரித்தலும் நடித்துள்ளார்.