ரொமான்ஸ் பாடல், வசனம் பேசும் வில்லன், படு மாடர்ன் டீச்சர் – ராட்சசன் பட ரீ மேக்கை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
480
ratchasan
- Advertisement -

ராட்சசன் பட ஹிந்தி ரீமேக்கை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாக தமிழில் வெளியான பல படங்கள் இந்தியில் ரீ- மேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடித்த கஜனி படம் துவங்கி சிங்கம், சிறுத்தை என பல படம் ரீ மேக் செய்யபட்டு இருக்கிறது. அதிலும் தமிழில் பேய்களை வைத்து பல பாகங்களாக வந்த ‘ காஞ்சனா 2 ‘ திரைப்படம் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனியில் ஆரமித்து காஞ்சனா-2 வரை அனைத்து பாகங்களுமே ஹிட்டான நிலையில் இந்த படத்தை இந்தியிலும் ரீ – மேக் செய்தார் லாரன்ஸ். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்த படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து இருந்தார். ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்திருந்தார்.

- Advertisement -

அக்சய் குமார் :

இப்படி பாலிவுட்டின் பிரபல சீனியர் நடிகராக திகழும் அக்சய் குமார் பல ரீமேக் படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், இவர் நடித்த ரீமேக் படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்குள்ளாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது அக்ஷய் குமார் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார். நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”.

ராட்சசன் படம்:

இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், அம்மு அபிராமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. பின் இந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருந்தார்கள். வழக்கம் போல் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ரோலில் அக்ஷய் குமார் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு cuttputlli என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

cuttputlli படம்:

இந்நிலையில் இந்த படத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் மீம்ஸ் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ராட்சசன் படத்தில் அமலா பால் அவர்கள் விஜயலட்சுமி என்கிற விஜி கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருப்பார். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு சரியான கச்சிதமாக உடை அணிந்து நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டிருந்தது. இதே கதாபாத்திரத்தில் தற்போது இந்தி ரீமேக்கில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.

கேலி கிண்டலுக்குள்ளான அக்ஷய் குமார்:

தன்னுடைய வழக்கமான கிளாமரை ரகுல் ப்ரீத் சிங் அள்ளி வீசி இருக்கிறார் என்று சொல்லலாம். அவர் டூபிஸில் பயங்கர கவர்ச்சியான ஆசிரியராக நடித்திருக்கிறார். அதுவும் இந்த படத்தில் இரண்டு ஐட்டம் பாடலுக்கு ரகுல் ப்ரீத் சிங் நடனம் ஆடுகிறார். அது மட்டுமில்லாமல் இந்த படம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. இதனால் நெட்டிசன்கள் பலரும் கணக்கு டீச்சரா இவங்க? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்றெல்லாம் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அக்ஷய்குமாரை பங்கமாக கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

வில்லன் ரோலை சுதப்பிய இயக்குனர் :

அதே போல ராட்சசன் படத்தில் மிக முக்கிய பலமாக இருந்தது கிறிஸ்டோபர் என்ற வில்லன் ரோல் தான். இந்த ரோலில் இரண்டு பேர் நடித்து இருப்பார்கள். ஆனால், வளர்ந்த பின்னர் அனைவரும் கொள்ளும் கிறிஸ்டோபர் கடைசி வரை பேசாமேலேயே தன் முக பாவனை மூலமே மிரட்டி இருப்பார். ஆனால், இந்த படத்தில் கிறிஸ்டோபர் கதாபத்திரத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரும் இந்த படத்தில் வசனங்களை பேசி இருக்கிறார்.

Advertisement