தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதிலும், ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ரவீனா குரல் கொடுத்து இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார். அதேபோல் ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ரவீனா அவர்கள் 'ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ரவீனா ரவி குறித்த தகவல்:
அதன் பின் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரட்டுக்கள் பெற்று இருந்தது.

ரவீனா ரவி திருமணம்:
அதோடு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று இருந்தது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ரவீனா நடித்து இருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதன் பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் ரவீனா ரவிக்கு திருமணமாகி இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாப்பிளை விவரம்:
அதாவது, நடிகை ரவீனா அவர்கள் மலையாள இயக்குனர் தேவன் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர் வாலட்டி என்ற மலையாள படத்தை இயக்கி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆனாலுமே ரவீனா தொடர்ந்து படங்களில் நடிப்பதாகவும் டப்பிங் பேசுவார் என்றும் அவருடைய அம்மா கூறியிருக்கிறார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.






