கோவிலுக்குள் இப்படி செய்யக்கூடாது ! பிரபல கமல் பட நடிகை மீது போலீசில் புகார்

0
889
Raveena-Tandon-at Lingaraj Temple
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வரில் உள்ள பிரபலமான லிங்கராஜா கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். கோவிலுக்குள் நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் கோவில் விதிகளுக்கு எதிராக வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் அழகு குறிப்புகள் குறித்து கூறுவது போல அதனை படமாக்கியுள்ளார்.

raveena tandon

- Advertisement -

இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பார்த்த கோவில் தற்போது நிர்வாகம் ரவீனா மீது போலீசில் புகார் அளித்தது.விதிகளை மீறிய அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் ரவீனாவோ லிங்கராஜா கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று யாரும் என்னிடம் கூறவில்லை.

நான் கோவிலுக்குள் சென்றபோது பக்தர்கள் பலரும் தங்களது செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.அப்போது ரசிகர்கள் சிலரும் என்னுடன் செல்ஃபி எடுத்தனர் என்கிறார்.

-விளம்பரம்-

raveena tandon actress

மேலும் நான் கோவிலுக்குள் எந்த வீடியோவும் எடுக்கவில்லை. என்னை பார்த்த உள்ளூர் மக்கள் என்னுடன் செல்ஃபி எடுத்தனர், வீடியோ எடுத்தனர். அதிகாரிகள் யாரும் அவர்களை தடுக்கவில்லை.அந்த வீடியோவில் ஏதோவொன்று தான் தற்போது சமூகவலைத்தளகளில் வைரலாகி வருகின்றது என்கிறார். .

Advertisement