கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் #metooo மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடுத்த பாலியல் புகாரை அடுத்து பல பிரபலங்கள் மீதும் அடுத்தடுத்து #metoo புகார் வெடித்து வருகிறது.இந்த #metoo புகாரில் நம்பமுடியாத பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்தன. அதிலும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி விகாரத்தில் விஷால். முருகதாஸ், ஸ்ரீகாந்த் என்று பல தமிழ் நடிகர்களும் சர்ச்சையில் சிக்கினார்கள்.
சின்மயி, ஸ்ரீரெட்டயை தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வந்தனர். தமிழ் திரைத்துறையை விட பாலிவுட் திரை துறையில் தான் இந்த காஸ்டிங் கவுச் சர்ச்சை அதிகம் உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகையான ரவீனா டாண்டன் பாலிவுட்டில் நடிகைகளை படுக்கைக்கு எ;அழைக்கும் பழக்கம் குறித்து பகிர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான ரவீனா டாண்டன், இந்தி திரையுலகில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது அர்ஜுன் நடிப்பில் வெளியான சாது என்ற படத்தின் மூலம் தான் என்றாலும் இவர் பிரபலமானது என்னவோ கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தின் மூலம் தான். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீனா டாண்டன் பேசுகையில்,
டந்த 90ஆம் ஆண்டுகளில் எனக்கு வந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதற்கு காரணம் பாலிவுட்டின் உள்ள எழுதப்படாத விதி. இந்த விதியின்படி பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும். ஆனால் அதற்கு தான் உடன்படாததால் எனக்கு வந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டன என்று கூறியுள்ளார். தற்போது ரவீனா, கே ஜி எப் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.