தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் காதலிக்க நேரமில்லை.

இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
ரவி மோகன் திரைப்பயணம்:
இந்தப் படத்தை ‘Dawn Pictures and Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ஜீனி, கராத்தே பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு இன்னும் சில படங்களில் ரவி கமிட்டாகி இருக்கிறார். தற்போது நடிகர் ரவி மோகன் அவர்கள் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ரவி மோகன் தயாரிப்பு:
அதாவது, இன்று 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். சென்னையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உடைய தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்கள். மேலும், இதில் இவர் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கும் படத்தை தான் முதலாக தயாரிக்கிறார். இதை சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=uVkWzQGbabE
விழாவில் ரவிமோகன்:
இந்த படத்திற்கு ப்ரோ கோட் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது படத்தை ரவி மோகன் இயக்குகிறார். அந்த படத்தில் யோகி பாபு தான் நடிக்கிறார். இந்த படத்திற்கு அன் ஆர்டினரி மேன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களுக்குமான பூஜையுமே இந்த நிகழ்வில் போடப்பட்டது. அப்போது விழாவில் பேசிய ரவி மோகன், எனக்கும் சில நெகட்டிவிட்டி இருந்தது. என் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள் தான்.
கெனிஷா பற்றி சொன்னது:
காசு, பணம் சம்பாதித்ததெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பை சம்பாதித்தவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன். இந்த விழா நடப்பதற்கு முழு காரணமே கெனிஷா தான். ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்ட போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி தான் கடவுள் கொடுத்த ஒரு கிப்ட் தான் கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர். அவங்களை மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க வருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ரவி மோகன் சொன்னதை கேட்டு கெனிஷா கண் கலங்கி விட்டார்.






