ரவி மோகனின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
122
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரவி மோகன்.
தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, வினய், சுனில், ரமேஷ், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் ரவி அவர்கள் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தம் வரை போனது. ஆனால், கடைசி நேரத்தில் அவருடைய காதலி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு பின் ரவி, திருமண வாழ்க்கை மீது வெறுப்பு காண்பிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய நண்பர்களுடைய வற்புறுத்ததால் மருத்துவமனை ஒன்றில் இவர் விந்து தானம் செய்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கம் நித்யா மேனன் ஓருவரை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், அவருடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து மனமுடைந்த நித்யா மேனன் பிரிகிறார்.
இருந்தாலும் இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் இவர்கள் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார். அங்கு அவருடைய வயிற்றில் ரவினுடைய உயிரணுவின் மூலம் குழந்தை உருவாகிறது.

அதற்கு பிறகு நித்யா மேனன், ரவியை சந்திக்கிறார். தன்னுடைய குழந்தைக்கு ரவி தான் அப்பா என்று தெரியாமலேயே அவர் மீது நித்யா மேனன் காதல் கொள்கிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது? நித்யா மேனன்- ரவி இருவரும் சேர்ந்தார்களா? நித்யா மேனனின் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது தான் என்று ரவிக்கு தெரிந்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை. ஒரு தைரியமான கதைக்களத்தை எடுத்து அதை சுவாரசியமாக கொடுக்க இயக்குனர் கிருத்திகா முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

-விளம்பரம்-

‘ஜென்Z’ என்ற இன்றைய தலைமுறையை ஈர்க்கும் வகையில் இயக்குனர் கதைகளை கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு இது ஒரு புதுமையான கதை என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கொடுக்காத கதையை குறித்து இயக்குனர் துணிச்சலாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. விந்துதானம், தன் பாலின திருமணம் போன்ற பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பம் தான் சரியில்லை. முதல் பாதி பெரியளவு சுவாரஸ்யம் இல்லாமல் கதை நகர்ந்தது.

கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சில காட்சிகள் எல்லாம் அடுத்து என்று யூகிக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது
இரண்டாம் பாதி நன்றாக செல்கிறது. அதோடு படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே குடித்துக் கொண்டே இருக்குமாறு காண்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அந்த காட்சியை தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும். ரவி நடிப்பு அருமை. இவரை விட ஒரு படி மேல நித்யா மேனனின் நடிப்பு அருமையாக இருக்கிறது. தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்து முடித்திருக்கிறார்.

இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை அருமையாக இருக்கிறது. பாடல்களுமே நன்றாக இருக்கிறது. ஆனால், சில பாடல்கள் மனதில் பதியவில்லை. மொத்தத்தில் படம் சுமாராக இருக்கிறது. ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பு சிறப்பு

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

இரண்டாம் பாதி ஓகே

குறை:

கதைகளத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில காட்சிகளை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

ஒரு புதுமையான கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும்

மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை- நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்

Advertisement