நீங்க நடிக்கிற படத்தின் கதையெல்லாம் வேற மாதிரி, விஷ்ணு விஷாலை பாராட்டிய அஸ்வின் (முன்னாள் கேப்டனாச்சே)

0
432
aswin
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் குறியாக இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் சிக்ஸ்பேக் வைத்து கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள்.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் விஷால் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் குடி பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னைகலும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதையும் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார். மேலும், விஷ்ணு விஷாலின் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே FIR திரைப்படம் தான். இந்த படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியான நிலையில் பல பிரச்சனைகளால் இந்த படம் தள்ளிப்போனது.

- Advertisement -

விஷ்ணு விஷாலின் FIR :

இப்படி ஒரு நிலையில் பல தடைகளுக்கு பின்னர் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விஷ்ணு விஷாலை பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர் என்றும் கூறலாம். அவ்வப்போது வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் அஷ்வின் தற்போது தனது நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷாலை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

-விளம்பரம்-

பாராட்டிய அஸ்வின் :

படத்தின் டிரைலர் பார்த்தேன். படத்தை காண காத்து இருக்க முடியவில்லை நண்பா. வழக்கம் போல உங்களுடைய கதை தேர்வு என்னை வியக்க வைக்கிறது என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால் : மிக்க நன்றி நண்பா உங்களது பந்துவீச்சு மாறுபாடுகள் மற்றும் சாதனைகளை விட இது ஒன்றும் நிச்சயம் அற்புதமானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் – கிரிக்கெட் – அஸ்வின் :

ஏற்கனவே கிரிக்கெட் களத்தை மையமாக கொண்டு 2014 ஆம் ஆண்டு ஜீவா என்ற படத்திலும் விஷ்ணு விஷால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகரான இவர் திரைப்படத்தில் நடிக்க வரும் முன் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார் என்பதும் அவரது கேப்டன்சியில் அஸ்வின் விளையாடி உள்ளதையும் அஸ்வினே ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement