திருமணத்திற்கு பின் கணவர் கொண்டாடிய முதல் பிறந்தநாள் – அவரது உயரத்தில் பரிசளித்து அசைத்திய மகாலக்ஷ்மி.

0
2289
Mahalakshmi
- Advertisement -

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சச்சின் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

- Advertisement -

தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்துவந்தார். பின் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல் நடித்து வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது.

அப்போது கூட மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து தங்களோடு திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதற்குப்பின் மகாலட்சுமி தன்னுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட பலரும் விமர்சனம் தான் செய்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ரவீந்தர் பிறந்த நாளை தனது முதல் கணவருக்கு பிறந்த மகனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். மேலும், தனது கணவருக்கு 6 அடியில் சிறப்பு பரிசு கொடுத்த வீடியோவை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறப்பு பரிசு ரவீந்தர் போலவே இருக்கும் 6 அடி உயர பெயிண்டிங் ஓவியம் ஆகும். இதைத்தான் அவர் தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மஹாலக்ஷ்மி ‘ ’எனக்கு மீண்டும் தைரியத்தை கொண்டு வந்த இந்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் தான் என் உறுதி. அதற்காக என்றும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். 6 அடி உயர இந்த புகைப்படத்தை வழங்குவதன் மூலம் இந்த நாள் சிறப்பானதாக மாறி உள்ளது, நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இந்த புகைப்படம் நன்றாக வந்து இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement