அவரது பெண்ணை குழந்தையோடு இன்னொருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ரஜினியை மோசமாக விமர்சித்த பிரமுகர்.

0
42611
rajini
- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார். ரஜினி அரசியலுக்கு இன்னும் முழுமையாக வராத போதிலும் அடிக்கடி ரஜினி பேசும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்து திராவிட கட்சிகள் மத்தியிலும் பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் அவர்கள் ராமரையும் சீதாவின் உருவத்தை உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். அதை யாரும் செய்தித்தாளில் வெளியிடவில்லை. ஆனால், சோவின் துக்ளக் பத்திரிக்கை மட்டும் அட்டைப்படத்தில் போட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அப்போதைய திமுக அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது இதனால் பத்திரிக்கை பிரதிகளை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த இதழை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார் என்று கூறி இருந்தார் ரஜினி.

இதையும் பாருங்க : 100க்கும் மேற்பட்ட திரைப்படம், பிரபலமான பல்வேறு சீரியல்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்.

- Advertisement -

பெரியார் குறித்து ரஜினி பேசிய இந்த கருதினால் பல்வேறு பெரியார் ஆதரவாளர்களும் திராவிட கட்சியினரும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்எல்ஏ அன்பழகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார் அந்த பேட்டியில் பேசியுள்ள அவர்,முரசொலி பத்திரிக்கை வைத்திருந்தால் திமுக துக்ளக் பத்திரிக்கை வைத்திருந்தால் அறிவாளியா என்ன? அப்படி பார்த்தால் ரஜினி படம் பார்ப்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொன்னால் ஒப்புக் கொள்வாரா? அவர் இதை தெரிந்துதான் பேசுகிறாரா. துக்ளக் பத்திரிக்கை நல்ல பத்திரிக்கை என்றால் அதை நீயே வைத்துக்கொள், அதைவிட்டுவிட்டு வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டு தமிழ்நாட்டை கெடுத்து கொண்டிருந்தால் இவரை சாலையில் கூட செல்ல விடமாட்டார்கள்.

1971இல் நடந்த சம்பவத்தின் போது இவர் கர்நாடகத்தில் தானே இருந்தார். இவருக்கு இப்படி பேச சொல்லி மேடையில் குருமூர்த்தி தான் இதனை சொல்லிக் கொடுத்திருப்பார். என்று நினைக்கிறேன். அவர் பெரியாரை குறித்து பேசும் அளவிற்கு தகுதியுடையவர் கிடையாது. அவரது பெண்ணிற்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது. ஆனால், அவரை குழந்தையோடு இன்னொருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் அது பெரியார் போட்ட சீர்திருத்தத்தில் தான் நடந்தது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினியை யும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் அன்பழகன்.

-விளம்பரம்-

நடிகர் ரஜினிகாந்த் பெரியாருக்கு எதிராக கருத்து கூறியதால் பெரியாரின் ஆதரவாளர்கள் பலரும் ரஜினிகாந்தை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வந்தாலும் ரஜினிக்கு ஆதரவாக பிஜேபியை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிஜேபி கட்சியைச் சார்ந்த எச் ராஜா, ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில், இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 – ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 – ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள் என்று அன்பழகனுக்கு பதிலடிகொடுத்துளளார்.

Advertisement